இந்தியா- தாய்லாந்து இடையே கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தம் : இந்தியத் தூதர் நாகேஷ் சிங்
07:07 PM Apr 02, 2025 IST
|
Murugesan M
பிரதமரின் தாய்லாந்து பயணத்தின் போது இரு நாடுகளிடையே கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையொப்பமாகும் எனத் தாய்லாந்துக்கான இந்தியத் தூதர் நாகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
Advertisement
பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்து நாட்டில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளைத் தாய்லாந்து அரசு செய்து வருகிறது.
இந்நிலையில், பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் மோடி நாளை தாய்லாந்து நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். இந்த பயணத்தின்போது தாய்லாந்து - இந்தியா இடையிலான கடல்சார் ஒத்துழைப்பு கையெழுத்தாகும் எனத் தாய்லாந்துக்கான இந்தியத் தூதர் நாகேஷ் சிங் தெரிவித்திருக்கிறார்.
Advertisement
Advertisement