இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம் மட்டுமல்ல ஜனநாயகத்தின் தாய்! : ஜெ.பி.நட்டா
ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Advertisement
மாநிலங்களவையில் அரசியல் அமைப்பு மீதான விவாதத்தில் ஜெ.பி.நட்டா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
அரசியல் அமைப்பு சாசனத்தின் 75 ஆம் ஆண்டு விழா, அரசியலமைப்பின் மீதான நமது அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதாக கூறினார்.
பிரதமர் மோடி கூறியது போல் இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாய் எனவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். தொடர்ந்த பேசிய அவர், அவசரநிலை அமல்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது எனவும் அதனை ஜனநாயக விரோத தினமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
நாடு ஆபத்தில் இருந்ததற்காகவா அவசர நிலை அமல்படுத்தப்பட்டது? எனக் கேள்வி எழுப்பிய ஜெ.பி.நட்டா, இந்திரா காந்தியின் நாற்காலி ஆபத்தில் இருந்ததால் தான் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு நாடு இருளில் தள்ளப்பட்டதாக குற்றம்சாட்டினார்.