இந்தியில் பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
தமிழ்நாட்டில் இந்தி கற்க விரும்பியதால் கேலிக்கு ஆளானதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Advertisement
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் வங்கிகள் திருத்த சட்ட மசோதா தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியில் பதில் அளித்தார். அப்போது பேசியவர்,
இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர், நிர்மலா சீதாராமன் பேசிய இந்தி தவறாக உள்ளது என குற்றம் சாட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், தனக்கு இந்தி தெரியாமல் இல்லை எனவும், ஆனால் தமிழ்நாட்டில் இந்தி படிக்க விடாமல் செய்ததற்கு திமுகவினர் மீதுதான் புகார் கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இந்தி கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? என கேலிக்கு உள்ளாக்கினார்கள் எனவும் அவர் வேதனை தெரிவித்தார். மேலும், அவர்கள் வந்தேறி என்ற வார்த்தையை பயன்படுத்தினர் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
அத்துடன் சென்னையில் இந்தி பிரசார சபாவை எரித்தது யார்? என திமுகவினரை நோக்கி கேள்வி எழுப்பவே, பாஜக எம்.பி.க்கள் மேஜைகளை தட்டி நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர்.