இந்திய கலாசாரத்தை பாதுகாத்து வரும் பிரதமர் மோடி அரசு - மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பெருமிதம்!
இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கலாசாரத்தை பாதுகாத்து வருவதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாசேத்ரா அறக்கட்டளை சார்பில் 71-வது ஆண்டு கலைத் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஜனவரி 2-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் கலாசேத்ரா மாணவிகள் நடத்திய இசைநிகழ்ச்சி அனைவரையம் மெய்மறக்க வைத்தது.
இதையடுத்து விழாவில் உரையாற்றிய கஜேந்திர சிங் ஷெகாவத், நமது செழுமையான கலாச்சார பாரம்பரியத்தைப் பேணிக்காத்து மேம்படுத்த கலாச்சார அமைச்சகம் உறுதி பூண்டுள்ளதாக கூறினார்.
இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கலாசாரத்தை பாதுகாத்து வருவதாகவும் வசுதைவ குடும்பகம் என்னும் உயரிய கொள்கையுடன் பாரம்பரியத்தை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் எனவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.