இந்திய மாணவர்கள் நாடு திரும்புவதற்காக நான்கரை மணி நேரம் நிறுத்தப்பட்ட ரஷ்யா - உக்ரைன் போர் : ராஜ்நாத் சிங் தகவல்!
10:42 AM Nov 17, 2024 IST | Murugesan M
பிரதமர் மோடியால் 22 ஆயிரம் மாணவர்கள் உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
மும்பையில் பேசிய அவர், ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியபோது, தங்கள் குழந்தைகளை மீட்டுத் தரும்படி பெற்றோர்கள் பிரதமரை சந்தித்தாக கூறினார். அதன் பேரில் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோரிடம் பிரதமர் மோடி பேசியதாகவும் தெரிவித்தார்.
Advertisement
இதன் காரணமாக நான்கரை மணிநேரம் போர் நிறுத்தப்பட்டதாகவும், எந்த நாடும் செய்ய முடியாத பணியை இந்தியா செய்ததாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Advertisement
Advertisement