இந்திய வரைபட விவகாரம் - தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!
10:42 AM Dec 11, 2024 IST
|
Murugesan M
நாட்டின் வரைபடத்தை சிதைத்து வெளியிட்ட DIPR நடவடிக்கை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், "திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற ஊடகப் பிரிவான TN DIPR, நமது நாட்டின் வரைபடத்தை சிதைத்து வெளியிட்டுள்ளது.
நமது சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் எப்போது என்று தெரியாத ஒருவரால் அரசுக்கு தலைமை தாங்கப்பட்டால், மாநில அரசின் துறை சார்ந்த பணிகளைக் கையாள அவர்களால் அமர்த்தப்பட்ட தகுதியற்ற கைப்பாவைகள் இத்தகைய மெத்தனப் போக்கில்தான் முடிவடையும்.
Advertisement
தேசிய ஒருமைப்பாட்டையும், சார்பில் திமுகவின் அலட்சியத்தையும் இந்தச் செயல் பிரதிபலிக்கிறது. திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்துகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement