செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதிக்க மறுப்பது நியாயமற்றது – ஆளுநர் ஆர்.என்.ரவி

09:15 AM Feb 28, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

இந்தியை எதிர்க்கிறோம் எனும் பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதிக்க மறுப்பது நியாயமற்றது  என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும் தொழில்முனைவுத் திறனையும் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள் என்றும்,  இளைஞர்களிடையே காணப்படும் போதைப்பொருள்  துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது என்றும்,  மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

துரதிருஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்வதாகவும், . இது உண்மையிலேயே நியாயமற்றது என்றும் அவர் கூறியுள்ளார். மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

Advertisement
Tags :
deny permission to study any southern languageFEATUREDGovernor R.N.RaviMAINname of opposing Hindi.opposing Hindi.South Tamil Nadu.Tamil Nadu Governor R.N. Ravi
Advertisement