செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இந்துக்களின் வாக்குகள் வேண்டும், ஆனால் இந்துக்களின் சமய அடையாளங்கள் வேண்டாமா? - ராசாவுக்கு ராஜா கேள்வி!

08:00 PM Apr 02, 2025 IST | Ramamoorthy S

இந்துக்களின் வாக்குகள் மட்டும் திமுகவுக்கு வேண்டும்? ஆனால் இந்துக்களின் சமய அடையாளங்கள் வேண்டாமா? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா  கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், திமுக கரை வேட்டி கட்டுபவர்கள் பொட்டு வைக்க வேண்டாம். கையில் கயிறு கட்ட வேண்டாம் என்று திமுகவில் உள்ள இந்துக்களிடம் சொல்லும் ஆ.ராசா அவர்களுக்கு..?

நெற்றியில் பொட்டு வைத்து கையில் கயிறு கட்டும் பழ்க்கம் உள்ள இந்துக்கள் யாரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என சொல்லும் தைரியம், ராசாவுக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

திமுகவில் இருக்கும் இஸ்லாமியர்கள் மசூதிக்கு செல்லுங்கள் ஆனால் தொப்பி அணியாதீர்கள், தாடி வைக்காதீர்கள் என்று ஆ.ராசா சொல்வாரா? எனறும அவர் வினவியுள்ளார்.

திமுகவில் இருக்கும் கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்கு செல்லுங்கள் ஆனால் கழுத்தில் சிலுவை அணியாதீர்கள் என்று ஆ.ராசா சொல்வாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

என்ன ஒரு அபத்தமான பேச்சு? இந்துக்களின் வாக்குகள் மட்டும் திமுகவுக்கு வேண்டும்? ஆனால் இந்துக்களின் சமய அடையாளங்கள் மற்றும் சம்பிரதாய சடங்குகள் மட்டும் வேண்டாமா? என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு தைரியமும், திராணியும் இருக்குமானால் இறை நம்பிக்கையுள்ள இந்துக்கள் எவரும் 2026 தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்கத் தேவையில்லை, இறை நம்பிக்கையற்ற நாத்திக சிந்தனை உள்ளவர்கள், ஈவெராவின் கொள்கைகளை ஏற்பவர்கள் மட்டுமே திமுகவுக்கு வாக்களித்தால் போதும் என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா ஸ்டாலின் அவர்களே? என்றும் ராஜா வினவியுள்ளார்.

டெங்கு மலேரியா கொசுக்களை அழிப்பது போல சனாதனத்தை பின்பற்றுபவர்களை அழிப்பேன் என்று பேசியவர் தானே திமுகவை சேர்ந்த துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திமுக இந்துக்களை அழிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது. இந்து விரோத திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணமிது அது காலத்தின் கட்டாயம் என்பதை இந்துக்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் ஹெச்.ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement
Tags :
MAINA.Raja MPbjp senior leader h rajaDMK want only Hindu votesreligious symbols of HindusMr. UdhayanidhiFEATURED
Advertisement
Next Article