இந்துக்களுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசு - இந்து முன்னணி குற்றச்சாட்டு!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும், தமிழக அரசின் செயல்பாடு இந்துக்களுக்கு எதிராக உள்ளது என்றும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisement
வங்கதேசத்தில் இந்துக்களின் உரிமைகளை மீட்கக்கோரி, மாவட்டத் தலைநகரங்களில் வரும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்து முன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மற்றும் ஆர்எஸ்எஸ் கோட்டத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும், உளவுத்துறை சரியாக செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும் குற்றவாளிகள் குறித்து காவல்துறையிடம் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவித்த அவர், தமிழக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.