செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக செயல்படும் எம்.பி. நவாஸ் கனி - அண்ணாமலை கண்டனம்!

02:39 PM Jan 23, 2025 IST | Sivasubramanian P

திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு உண்ட எம்.பி. நவாஸ் கனிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக நவாஸ் கனி செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். எம்.பி. பதவியில் இருக்கும் ஒருவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த, நவாஸ் கனியை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும்  என்றும் அவர் கூறியுள்ளார்.

டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும்,  தமிழக மக்களுடன் பிரதமர் மோடி துணை நிற்பார் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

Advertisement

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது வரவேற்கதக்கது என்றும் அண்ணாமலை கூறினார். இதனை  சாதாரண சாலை விபத்ததாக பார்க்காமல் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

Advertisement
Tags :
Annamalai Press Meetchennai airportFEATUREDHindu peopleMAINMP Nawaz Kaninon-vegetarian food on Thiruparankundram Hill.prime minister modiTamil Nadu BJP leader Annamalai
Advertisement
Next Article