செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பொதுக்கூட்டம் - கொளத்தூர் மணியை முற்றுகையிட்ட இந்து அமைப்புகள்!

06:17 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

கோவை சிவானந்தா காலனியில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கூட்டம் நடத்த முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தலைவர் கொளத்தூர் மணியை பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினர் முற்றுகையிட்டனர்.

Advertisement

கோவையில் திராவிட விடுதலைக் கழகத்தினர் சார்பில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் சிவானந்தா காலனி பகுதியில் மீண்டும் கூட்டம் நடத்த இருந்த திராவிடர் விடுதலைக் கழகத்தினருக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் காவல்துறையிடம் மனு அளித்தனர்.

இருப்பினும் திராவிட விடுதலை கழகத்தலைவர் கொளத்தூர் மணிக்கு கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. எனவே அதற்கு போட்டியாக இந்து அமைப்பினர் கூட்டம் நடத்த முயன்றபோது, அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் கூட்டத்தில் பேச வந்த கொளத்தூர் மணியை பா.ஜ.க மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது. இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ்குமார், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டத்தலைவர் சிவராஜ், மாவட்டச் செயலாளர் ரவீந்திரன், தென் தமிழ்நாடு தர்ம யாத்ரா பொறுப்பாளர் சிவலிங்கம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement
Tags :
BJP and Hindu organizationscoimbatoredenigrate Hinduism.FEATUREDHindu organizations protestKolathur ManiMAINSivananda Colony
Advertisement