இந்தோனேசியாவில் ஐபோன் மீதான தடையை நீக்கி உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் மீண்டும் பரிசீலித்து வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் முதலீட்டு வாக்குறுதிகளைப் பூர்த்தி செய்யாததால் ஐபோன் 16 மற்றும் பிற புதிய மாடல்களுக்கு இந்தோனேசிய அரசு தடை விதித்தது.
இதனால் ஆப்பிள் நிறுவனம் கடும் சிக்கலில் மாட்டிக் கொண்டது. இந்த நிலையில், நிலைமை ஆப்பிள் நிறுவனத்துக்கு சாதகமாக மாறக்கூடும் என்று ஆப்பிள் இன்சைடர் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனைதொடர்ந்து ஐபோன்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் மீண்டும் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.