செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இனி சிவனை தரிசிக்கலாம் : கைலாஷ் யாத்திரைக்கு பச்சைக்கொடி காட்டிய சீனா - சிறப்பு தொகுப்பு!

09:00 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

இந்த ஆண்டில், திருக்கயிலாய மானசரோவர் யாத்திரையை தொடங்கவும், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கவும், இந்தியாவும் சீனாவும் முடிவு செய்துள்ளன. வாழ்நாளில் ஒருமுறையாவது கைலாயம் செல்ல விரும்பும் பக்தர்கள், இனி, எளிதாக விமானத்தில் சென்று சிவபெருமானை இனி தரிசிக்க முடியும். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

கடல் மட்டத்தில் இருந்து 21,778 அடி உயரத்தில் திருக்கயிலாய மலை அமைந்துள்ளது. உலகத்தின் உச்சி என்று கூறப்படுகிறது. பூலோகத்தின் நடுப்பகுதியாக விளங்கும் திருக்கயிலாயம் சிவபெருமானின் வீடாகும். திருக்கயிலாய மலையில், சிவபெருமான் தனது தேவியான பார்வதியம்மையுடன் இருந்து ஆட்சி செய்வதாக வேதங்கள் கூறுகின்றன.

திருக்கயிலாய மலையின் தெற்கு அடிவாரத்தில் மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. மானசரோவர் ஏரி, முதன்முதலில் பிரம்மனின் மனதில் காட்சியானதாகவும், அதன் பிறகு அது பூமியில் உருவானது என்கிறது வேதம். மானசரோவர் ஏரி, 51 சக்திபீடங்களில் ஒன்றாகும். கோடை காலத்தில் பனி உருகும் போது, திருக்கயிலாயத்தில், சிவபெருமானின் உடுக்கையின் ஒலி கேட்கிறது

Advertisement

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா எடுத்த, திருக்கயிலாய மலையின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் சிரித்த நிலையில், சிவபெருமானின் திருவடிவத்தைக் காட்டுகிறது. இம்மலையை அடைந்த 12 மணி நேரத்துக்குள், அசாதாரண முடி மற்றும் நகம் வளர்ச்சி அடைவதாகவும் சிலர் கூறியுள்ளனர்.

இத்தனை ஆச்சரியங்கள் கொண்ட திருக்கயிலாய தரிசனம் என்பது இந்துகளின் வாழ்வில் முக்கியமானதாகும். திருக்கயிலாய யாத்திரை, இந்துக்களின் மிக புனிதமான யாத்திரை ஆகும். இது முக்திக்கான பயணம் ஆகும்.

இந்துக்கள் மட்டுமின்றி, புத்த ,சமண சமயத்தவரும் திருக்கயிலாய யாத்திரைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில்,பக்தர்கள் திருக்கயிலாய யாத்திரை மேற்கொள்வார்கள். 1951 ஆம் ஆண்டிலிருந்து சீன அரசு, திருக்கயிலாய மலை மற்றும் மானசரோவர் ஏரிக்குப் புனித யாத்திரை செல்ல அனுமதி அளித்து வருகிறது.

திருக்கயிலாய யாத்திரை மேற்கொள்ள, சிக்கிம் மற்றும் நேபாளம் வழியாக இரண்டு சாலை வழிகள் உள்ளன. லக்னோவிலிருந்து வடகிழக்கே 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நேபாளத்தின் கஞ்ச் வழியாக இந்த சாலைகள் செல்கின்றன. இந்த சாலைகள் 20 சதவீதம் இந்தியாவிலும் , 80 சதவீதம் சீனாவிலும் உள்ளன. இதனால், இந்த சாலைகள் வழியான திருக்கயிலாய யாத்திரை மிகவும் சிரமம் உள்ளதாக அமைந்திருந்தது.

திருக்கயிலாய யாத்திரையை எளிதாக்கும் வகையில், கட்டியாபாகர் – லிப்புலேக் சாலை, தொடங்கப்பட்டது. மத்திய அரசால் கட்டி முடிக்கப்பட்ட சாலை, 84 சதவீதம் இந்தியாவிலும், வெறும் 16 சதவீத தூரம் மட்டுமே சீன நிலப்பரப்பிலும் உள்ளன.

இந்தச் சாலை கட்டியாபாகரில் தொடங்கி கைலாஷ்-மானசரோவர் நுழைவாயிலான லிப்புலேக் பாஸ்ஸில் முடிகிறது. திருக்கயிலாய யாத்திரைக்கான இந்த புதிய வழி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஒரு வரலாற்றுச் சாதனை ஆகும்.

கொரொனா தொற்று பரவல் காரணமாக, 2020 ஆம் ஆண்டிலிருந்து திருக்கயிலாய யாத்திரை நடைபெறவில்லை. இந்தியா- சீனா இடையேயான நேரடி விமானச் சேவையும் நிறுத்தப்பட்டன. கொரொனாவுக்குப் பிறகு, திருக்கயிலாய யாத்திரை அனுமதியைச் சீனா புதுப்பிக்கவில்லை. நேரடி விமான சேவையையும் தொடங்கவில்லை.

கடந்த அக்டோபர் மாதம், நடந்த பிரிக்ஸ் மாநாட்டின்போது, ரஷ்யாவில் சீன அதிபருடனான பிரதமர் மோடியின் சந்திப்புக்குப் பின், இந்தியா-சீனா இருதரப்பு உறவுகள் மேம்பட்டன. மக்கள்நலன் சார்ந்த சுமூக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டன.

கடந்த வாரம், இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இடையேயான சந்திப்பு நடந்தது. இந்தியா- சீனா இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், நிறுத்தப்பட்ட திருக்கயிலாய மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது. கூடுதலாக, இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவையும் மீண்டும் தொடங்க ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது.

இந்தியா-சீனா இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையில், பரஸ்பர நம்பிக்கையை வளர்வதற்கு இது முதல் அடையாளம் என்று கூறப்படுகிறது.

Advertisement
Tags :
FEATUREDMAINIndiachinaLord ShivaMansarovar Yatradirect flight services between india chinaThirukailaya.
Advertisement