For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இனி மருந்து மாத்திரை அட்டைகளில் QR CODE- மத்திய அரசு

05:18 PM Aug 02, 2023 IST | Abinaya Ganesan
இனி மருந்து மாத்திரை அட்டைகளில் qr code  மத்திய அரசு

போலி மருந்துகளின் விற்பனையை தடுக்கும் வகையில் மருந்து அட்டைகளில் QR code அச்சிட மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் முடிவெடுத்துள்ளது . இதன் மூலம் மக்கள், வாங்கும் பொருட்களின் முழு விவரங்களையும் கண்டறிய முடியும் .

Advertisement

நாட்டில் விற்கப்படும் அனைத்து வகையான, மருந்து மாத்திரைகளும், மத்திய, மாநில மருந்து தரக்  கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. என்றாலும் சந்தையில், தரமற்ற மற்றும் போலி மருந்துகள் விற்பனைகள் தொடர்ந்து நடக்கிறது. இவற்றைத்  தடுக்கவும், முன்னணி நிறுவன பெயரிலான மருந்துகளின் தரத்தை உறுதி செய்யவும், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், சில மாதங்களுக்கு முன்னறிவிப்பை  வெளியிட்டது.

அதில், உயிர்காக்கும் 300 முக்கிய மருந்துகளின் அட்டைகளில், QR code அச்சிட்டு விற்கப்படும் எனவும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட முக்கியமான, மருந்துகளின் அட்டைகளில், QR code அல்லது பார் கோடு அச்சிடப்படும்.

Advertisement

அந்த  code-டை ஸ்கேன் செய்தால், மருந்தின் உட்கூறுகள் விவரம், தயாரிப்பாளர் விவரம், உற்பத்தி, காலாவதி தேதி உட்பட அனைத்து விபரங்களையும் அறிய முடியும்.

இதன் மூலம் மருந்தின் உண்மைத் தன்மையை மக்கள் அறியலாம் எனவும் இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement
Tags :
Advertisement