இன்றுடன் நிறைவடைகிறது +2 பொதுத்தேர்வு!
07:13 AM Mar 25, 2025 IST
|
Ramamoorthy S
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடையும் நிலையில், பள்ளி வளாகத்தை விட்டு மாணவர்கள் அமைதியாகச் செல்ல போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அமர்த்த தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Advertisement
தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 3ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள் மே மாதம் 5ஆம் தேதி வெளியாக உள்ளன.
தேர்வு நிறைவடைந்ததை மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் மை தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்நிலையில் பொதுத்தேர்வு முடிந்து மாணவர்கள் அமைதியாக பள்ளி வளாகத்தை விட்டுச் செல்ல வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளூர் காவல் நிலையங்கள் மூலம் போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அமர்த்திட தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement