For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இன்று உலக யானைகள் தினம் 2023

08:08 PM Aug 12, 2023 IST | Abinaya Ganesan
இன்று உலக யானைகள்  தினம் 2023

உலகம் முழுவதும் குறைந்து வரும் யானைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், யானைகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கவும் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி சர்வதேச யானைகள் தினம் கடை பிடிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 12, 2012 அன்று, கனேடியரான பாட்ரிசியா சிம்ஸ் மற்றும் தாய்லாந்தின் எச்.எம் ராணி சிரிகிட்டின் மற்றும் தாய்லாந்தின் யானை மறு அறிமுக அறக்கட்டளைகள் இணைந்து உலக யானை தினத்தை நிறுவினார்.

Advertisement

ஒரு எழில்மிகு, வளமான காடுகளை உருவாக்குவதில் யானைகளுக்கு பெரும் பங்கு உள்ளது. அப்படிப்பட்ட அழகான, யானைகள் மனிதர்களால் பாதிக்கப்படுகின்றன.வனப்பரப்பு குறைவது, யானைகளுக்குத் தேவையான உணவு, தண்ணீர் பற்றாக்குறை ஆகியவை யானைகள் அழிவுக்குக் காரணமாகிறது.

மற்ற விலங்குகளை விட யானைகளுக்கு ஞாபக சக்தி மிக மிக அதிகமாக இருக்கும் உதாரணமாக, ஒரு மனிதன் யானையிடம் அன்பு செலுத்தினாலோ அல்லது துன்புறுத்தினாலோ அந்த நபரை சுமார் 10 ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் கூட அதற்கு ஞாபகம் இருக்கும்.  மேலும் யானைகளுக்கு மோப்ப சக்தியும் அதிகம். சுமார் 2 கி.மீ தொலைவு வரை மோப்பம் செய்து வைத்துக் கொள்ளும் என ஆய்வில் கூறப்படுகிறது.

Advertisement

உலக வனவிலங்கு நிதி அமைப்பின் கூற்றுப்படி, உலகில் சுமார் 415,000 ஆப்பிரிக்க யானைகள் உள்ளன. அதில் சுமார் 40,000 முதல் 50,000 ஆசிய யானைகள் உள்ளன என தெரிவித்துள்ளது. ஆசிய யானைகளின் 60 சதவீதம் வாழ்விடமாக இந்தியா உள்ளது . மேலும் கடந்த 8 ஆண்டுகளாக யானைகளின் இனம் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்தது .

இந்தியாவின் மிக பெரிய யானையாக தெச்சிக்கோட்டுகாவு யானை உள்ளது . இது கேரளா மாநிலம் திரிசூர் மாவட்டத்தில் உள்ளது. 10.53 அடி (3.2 மீ) உயரம் கொண்ட கம்பீரமான யானையாக தெச்சிக்கோட்டுகாவு யானை இருக்கிறது.

Advertisement
Tags :
Advertisement