இன்று கூடுகிறது தமிழக சட்டசபை!
09:26 AM Dec 09, 2024 IST
|
Murugesan M
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
Advertisement
கடந்த ஜூன் மாதம் சட்டசபை கூடியபோது, மானியக்கோரிக்கைகள் மீது விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, 55 மானியக் கோரிக்கைகள் மீதான வாக்கெடுப்பு உள்ளிட்டவை நடைபெற்றன.
ஜூன் 29ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு அந்த கூட்டத்தொடர் நடைபெற்றது. பேரவை விதிகளின்படி சட்டப்பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, இன்று மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது.
Advertisement
துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், டாங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானமும் கொண்டுவரப்படவுள்ளது.
Advertisement
Next Article