இன்று மாலையுடன் ஓய்கிறது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம்!
10:03 AM Feb 03, 2025 IST
|
Murugesan M
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
Advertisement
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் களத்தில் உள்ளனர்.
அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில், திமுக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்கிறது. இதனால், அரசியல் கட்சியினர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement