நாளை பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
07:15 AM Mar 18, 2025 IST
|
Ramamoorthy S
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமிக்கு திரும்புகிறார்.
Advertisement
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் இருவரும் கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.10 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டம் கைவிடப்பட்டது.
இதனால், 9 மாதங்களாக அங்கேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில்,டிராகன் விண்கலம் மூலம் 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர். புதியவர்களிடம் பணிகளை ஒப்படைத்துவிட்டு, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் நாளை காலை 3.30 மணியளவில் பூமிக்கு திரும்ப உள்ளனர். இந்நிகழ்வை நேரலை செய்ய நாசா ஏற்பாடு செய்துள்ளது.
Advertisement
Advertisement