இன்ஸ்டாவில் பழகியவருடன் இன்ப சுற்றுலா - இளம்பெண் மர்ம மரணம்!
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே இன்ஸ்டாகிராமில் பழகியவருடன் சுற்றுலா சென்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தயிர்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தராஜன் - கண்மணி தம்பதியின் 3-வது மகள் மோனிகா. சித்தோடு அருகே உள்ள ஜவுளிகடையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் சுனில் என்ற நபருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிய மோனிகா தனது நண்பர் சுனிலுடன் சேர்ந்து பர்கூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் மோனிகா பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பலனின்றி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மோனிகாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மகள் இறப்பில் உண்மை மறைக்கப்படுவதாக தெரிவித்த மோனிகாவின் குடும்பத்தினர், சுனிலுக்கும் அவரது இருசக்கர வாகனத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதது எப்படி என்ற கேள்வியையும் எழுப்பினர்.