ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை!
05:20 PM Jan 17, 2025 IST | Murugesan M
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் அரசுக்கு வர வேண்டிய பணத்தை, தனி நபர் அறக்கட்டளையில் வரவு வைத்து, அதற்கு லஞ்சமாக பல நுாறு ஏக்கர் நிலத்தை அவர்கள் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement