செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இயற்கை விவசாயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் - குஜராத் பர்வாட் சமூகத்தினர் விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

06:51 AM Mar 21, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

குஜராத்தின் பர்வாட் சமூகத்தினர் இயற்கை விவசாயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பர்வாட் சமூகத்தினர் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு பங்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அடுத்த 25 ஆண்டுகளில் நாம் வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப வேண்டும் என்றும்,  அதற்கு பர்வாட் சமூகத்தினரின் ஆதரவு தனக்கு தேவை என்றும் தெரிவித்தார்.
Advertisement

நமது தாய் பூமிக்கு விஷ இரசாயனங்களை ஊற்றியதால் மிகுந்த வேதனையை அளித்துள்ளதாகவும், தற்போது  ​​அதை மீண்டும் ஆரோக்கியமாக்குவது நமது பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

மாட்டு சாணம் பூமியை மீட்டெடுக்க உதவும் என்றும்,. இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொண்டு தாய் பூமிக்கு சேவை செய்யுமாறு உங்கள் அனைவரையும்  கேட்டுக்கொள்கிறேன் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Advertisement
Tags :
adopt natural farmingAhmedabadFEATUREDMAINmodi speechprime minister narendra modi
Advertisement