இயல்பு நிலைக்கு திரும்பிய விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் - சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ் போக்குவரத்து தொடக்கம்!
02:49 PM Dec 05, 2024 IST
|
Murugesan M
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்து சேவை தொடங்கியது.
Advertisement
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் குளம் போல தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து சேவையும் ஸ்தம்பித்தது.
நகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றிய நிலையில்,
தற்போது பேருந்து சேவை தொடங்கியுள்ளது. சென்னை, திருச்சி, சேலம், திருவண்ணாமலை, கோவை, புதுச்சேரி போன்ற நகரங்களுக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
Next Article