செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இரட்டை இலை சின்னம்! : தேர்தல் ஆணையத்துக்கு கெடு

05:06 PM Dec 04, 2024 IST | Murugesan M

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்த உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், சூர்ய மூர்த்தியின் மனு தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பதில் கிடைக்கப்பெற்றதாகவும், இது குறித்து 4 வாரங்களில் முடிவெடுக்கப்படும் எனவும் வாதிட்டார்.

Advertisement

ஓ. பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இந்த விவகாரத்தில் தங்கள் தரப்புக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை எனவும், தங்களது தரப்பையும் கேட்ட பின்னரே முடிவெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, சூர்ய மூர்த்தியின் மனு குறித்து 4 வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

Advertisement
Tags :
MAINThe double leaf symbol! : Shame on Election Commission
Advertisement
Next Article