அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - இரவு விருந்து மூலம் ரூ.2000 கோடி அள்ளிய டிரம்ப்!
06:30 PM Jan 21, 2025 IST | Sivasubramanian P
ஒரே இரவு விருந்தின் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளி டிரம்ப் புதிய சாதனை படைத்துள்ளார்.
திங்கள்கிழமை டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி விருந்தினர்களுடன் இரவு விருந்து உண்ணும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க குறைந்தபட்சம் 50 ஆயிரம் டாலர்கள் முதல் அதிகபட்சம் 1 மில்லியன் டாலர்கள் வரையிலான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. அதேவேளையில், டிரம்ப் மற்றும் வான்ஸ் இருவரையும் சந்திக்க இத்தொகை இரட்டிப்பாக நிர்ணயிக்கப்பட்டது.
Advertisement
இதற்கான டிக்கெட்டுகளை வாங்க உலகம் முழுவதுமிருந்து சென்றிருந்த தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டினர். இதன் மூலம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவு வருமானம் கிடைத்துள்ள நிலையில், இத்தொகையை அதிபரின் நூலகத்திற்கு செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement