இரவோடு இரவாக கோயிலை அகற்றிய அதிகாரிகள்!
10:47 AM Jan 13, 2025 IST | Murugesan M
சென்னை மாங்காடு அருகே இரவோடு இரவாக கோயிலை அதிகாரிகள் இடித்து அகற்றியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் இருந்து கொளப்பாக்கம் செல்லும் சாலை பகுதியில் விநாயகர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கூறி அதன் முன் பகுதியை அகற்றுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Advertisement
இந்நிலையில் பகல் நேரத்தில் கோயிலை இடித்து அகற்றினால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் இரவோடு இரவாக நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கோயிலின் முன்பகுதியை இடித்து அகற்றி உள்ளனர். காலையில் கோயிலின் முன் பகுதி மாயமாகி இருப்பதைக் கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Advertisement
Advertisement