இராமேஸ்வரம் : இராஜஸ்தான் பக்தர் மரணம் - இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்!
12:57 PM Mar 21, 2025 IST
|
Murugesan M
இராஜஸ்தான் மாநில பக்தரின் மரணத்திற்கு நீதி கேட்டு ராமேஸ்வரத்தில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
Advertisement
இராமநாதசுவாமி கோயிலில் கடந்த 18-ஆம் தேதி சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜ் தாஸ் என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது மரணத்திற்கு நீதி கேட்டும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத கோயில் நிர்வாகத்தைக் கண்டித்தும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற காவல்துறை அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
Advertisement
Advertisement