இராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி : ஹெலிபேட்டில் ஹெலிகாப்டரை இறக்கி சோதனை!
05:00 PM Mar 31, 2025 IST
|
Murugesan M
இராமநாதபுரத்திற்குப் பிரதமர் மோடி வருகை தருவதை முன்னிட்டு, ஹெலிபேட்டில் ஹெலிகாப்டரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது.
Advertisement
இராமேஸ்வரத்தில் பழைய பாம்பன் பாலம் அருகே 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகப் பாலம் கட்டப்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இந்த புதிய பாலத்தை ஏப்ரல் 6-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த நிலையில், பிரதமர் பயணம் செய்யக் கூடிய ஹெலிகாப்டரை மதுரையில் இருந்து மண்டபம் ஹெலிபேட் தளத்தில் இறக்கி விமானப்படை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனை அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்தனர்.
Advertisement
Advertisement