வழிமறித்துத் தாக்கிய உறவினர் மீது போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை : பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு!
கன்னியாகுமரி மாவட்டம், குமரகோயில் பகுதியில் இருசக்கர வாகனத்தை வழிமறித்துத் தாக்கிய உறவினர் மீது போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
மணிகட்டி பொட்டல் பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த ஐஸ்வர்யா என்பவரை, பிரசாந்த் என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.
ஐஸ்வர்யா வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் இந்த திருமணத்திற்கு பிரசாந்தின் தம்பி பிரதீப் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், குமாரகோயிலுக்கு சாமி கும்பிட இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை வழிமறித்து பிரதீப் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தக்கலைக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.