இருசக்கர வாகனம் மீது அதிவேகத்துடன் மோதிய கார் - ஒருவர் படுகாயம்!
11:32 AM Mar 16, 2025 IST
|
Murugesan M
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இருசக்கர வாகனம் மீது கார் அதிவேகத்துடன் மோதியதில் ஒருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
Advertisement
சாமியார்மடம் பகுதியை சேர்ந்த பெஸ்கி, முளகுமூடு பகுதியில் இருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். கல்லுவிளை பகுதியில் சென்றபோது எதிரே அதிவேகத்தில் வந்த கார் பெஸ்கியின் வாகனம் மீது மோதியது.
இதில் பெஸ்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இந்நிலையில் விபத்து குறித்த பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement