இரு நாட்களில் விடைபெறும் வடகிழக்கு பருவமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
05:45 PM Jan 26, 2025 IST | Sivasubramanian P
கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் வரும் 31-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும், வரும் 30-ம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement