அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25% வரி - ட்ரம்ப் அறிவிப்பு!
12:50 PM Mar 27, 2025 IST
|
Ramamoorthy S
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
Advertisement
வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த அவர், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரியால், உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்றும், ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர்கள் ஈட்டப்படும் எனவும் தெரிவித்தார்.
ஏப்ரல் 3 முதல் வரி அமலுக்கு வருவதால், அமெரிக்காவில் வாகன உற்பத்தியாளர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறினார். மேலும், அமெரிக்காவில் புதிய தொழிற்சாலைகள் திறக்க ஊக்குவிக்க இந்த நடவடிக்கை உதவும் எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
Advertisement
Advertisement