இறுதிக்கட்டத்தை நெருங்கும் உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம்!
உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் காஷ்மீர் மக்களுக்கு தடையின்றி ரயில் சேவை கிடைக்கும் என்று நம்பிக்கை
உருவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் இமயமலை மட்டுமின்றி சிறிய, பெரிய அளவிலான மலைகள், ஏற்ற, இறக்கத்துடன் கூடிய பள்ளத்தாக்குகள் நிறைந்துள்ளன. இதனால் மக்களுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்குவதே சவாலானதாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் ஜம்மு மக்களுக்கு தடையின்றி ரயில் சேவை வழங்கும் உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இன்னும் சில மாதங்களில் பணிகள் நிறைவடைய உள்ளதால், ஜம்மு மக்களுக்கு தங்கு தடையின்றி ரயில் சேவை கிடைக்கும் நம்பிக்கை உருவாகியுள்ளது. இப்பாதையில் உள்ள செனட் ரயில் பாலம் இந்தியாவின் மிகப்பெரிய சாதனை மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
சுமார் ஆயிரத்து 486 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்த பாலம், ஈபிள் டவரைவிட 35 மீட்டர் கூடுதல் உயரம் கொண்டுள்ளதால் உலகின் 8-வது அதிசயமாக விளங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.