இறுதி வரை சமூகத்திற்காக உழைத்த ராஜகோபாலாச்சாரியார் - அண்ணாமலை புகழாரம்!
11:55 AM Dec 10, 2024 IST
|
Murugesan M
இறுதி காலம் வரை ராஜகோபாலாச்சாரியார் சமூகத்திற்காக உழைத்த்தாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சுதந்திரப் போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநராகவும், சென்னை மாகாணம் மற்றும் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகவும், மத்திய உள்துறை அமைச்சராகவும் திறம்பட மக்கள் பணியாற்றியவருமான, பாரத ரத்னா, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பிறந்த தினம் இன்று.
தலைசிறந்த வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும் விளங்கியவர். அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்தியவர். மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவுப் போராட்டம் என, தமது இறுதிக் காலம் வரை சமூகத்திற்காகவும், மக்களுக்காகவும் உழைத்த அமரர் ராஜாஜி அவர்கள் புகழைப் போற்றி வணங்குவோம் என அண்ணாமலை கூறியுள்ளார்.
Advertisement
Advertisement