செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இலங்கையில் ரயில் கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

06:29 PM Apr 06, 2025 IST | Murugesan M

இலங்கையில் இந்திய அரசின் உதவியுடன் அமைந்த மஹோ-அநுராதபுரம் ரயில் பாதையை, பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயகவும் திறந்து வைத்தனர்.

Advertisement

மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்நிலையில், இலங்கையில் இந்திய அரசின் உதவியுடன் அமைந்த மஹோ-அனுராதபுரம் ரயில் பாதையைப் பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயகவும் திறந்து வைத்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, அனுராதபுரம் ரயில் நிலையத்தில் ஒரு ரயிலையும் இருவரும் கூட்டாகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். மேலும், பயணிகளிடம் கையசைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக, அநுராதபுரத்தில் உள்ள ஜெயஸ்ரீ மஹா போதி கோயிலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகவுடன் சென்றார். அங்குப் புத்த துறவிடம் ஆசி பெற்றார். மேலும், ஜெயஸ்ரீ மஹா போதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

Advertisement
Tags :
FEATUREDMAINஇலங்கைPrime Minister Modi inaugurated railway infrastructure projects in Sri Lanka!
Advertisement
Next Article