செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இலங்கை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!

08:20 PM Apr 06, 2025 IST | Murugesan M

இரு நாடுகளுக்கு இடையேயான விரிவான ராணுவ ஒப்பந்தத்தின் காரணமாக, இலங்கையின் 750 ராணுவ அதிகாரிகளுக்கு, இந்தியாவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

Advertisement

பிரதமர் மோடியின் தற்போதைய சுற்றுப்பயணத்தின்போது இலங்கை - இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே முதல் முறையாக விரிவான ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில், ராணுவ அதிகாரிகளைப் பகிர்ந்து கொள்வது, பயிற்சி அளிப்பது, தொடர்ந்து இரு ராணுவத்துக்கும் இடையே தகவல் பரிமாற்றம், ராணுவத் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளில் ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும்.

Advertisement

இரு நாட்டு ராணுவமும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது, கடற்படைகள் கூட்டுப் பயிற்சி மற்றும் ரோந்து ஆகியவற்றை மேற்கொள்ளவுள்ளது.

அத்துடன் இந்த ஒப்பந்தம் இரு நாட்டு ராணுவமும் பயிற்சிகள், பயிலரங்குகள் உள்ளிட்டவை நடத்தவும் வழிவகை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கையின் 750 ராணுவ அதிகாரிகளுக்கு, இந்தியாவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

Advertisement
Tags :
MAINபிரதமர் மோடிஇலங்கைSri Lankan officers trained in India!
Advertisement
Next Article