இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!
11:23 AM Dec 16, 2024 IST | Murugesan M
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக-வுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அதிபரை வரவேற்றனர்.
Advertisement
இதையடுத்து, பிரதமர் மோடியை சந்தித்து இலங்கை அதிபர் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, இரு நாடுகளிடையேயான மீனவ பிரச்சினை, எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கலாம் என கூறப்படுகிறது.
Advertisement
Advertisement