செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இலங்கை - இந்தியா மீனவர்களுக்கிடையே நட்பு ரீதியான பேச்சு வார்த்தை!

01:14 PM Mar 26, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

இலங்கை - இந்தியா மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக பேச்சுவார்த்தை வவுனியாவில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இலங்கை - இந்திய மீனவர்களுக்கிடையே அவர்களின் சொந்த முயற்சியில் பேச்சு வார்த்தை நடத்துவது குறித்துக் கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இலங்கை வவுனியாவில் இருநாட்டு மீனவர்களுக்கும் இடையே இன்று  பேச்சு வார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் 6 மீனவர்கள் கொண்ட குழுவும், இலங்கை சார்பில் 12 பேர் கொண்ட குழுவும் பங்கேற்கின்றனர். தமிழக மீனவர்கள் ஒரு மாத காலம் இலங்கை கடற்பரப்புக்குள் இழுவை மடி மீன்பிடியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement
Tags :
fishermenFriendly talks between Sri Lankan and Indian fishermenIndia VS SrilankaMAINவவுனியா
Advertisement