இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி!
07:29 PM Mar 28, 2025 IST
|
Murugesan M
பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின் போது பாதுகாப்புத்துறை, எரிசக்தித்துறை சார்ந்த பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிசிரி தெரிவித்துள்ளார்.
Advertisement
பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 4-ம் தேதி அரசு முறை பயணமாக இலங்கை செல்கிறார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிசிரி, பிரதமரின் இலங்கை பயணத்தின் போது இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே உடன் பிரதமர் மோடி பல்வேறு முக்கிய பேச்சுகள் நடத்த உள்ளதாகவும் விக்ரம் மிசிரி தெரிவித்தார்.
Advertisement
Advertisement