செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் - தேசிய மக்கள் சக்தி கூட்டணி முன்னிலை!

09:58 AM Nov 15, 2024 IST | Murugesan M

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், அந்நாட்டு அதிபர் அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் அனுரா குமாராவின் தேசிய மக்கள் சக்தி கட்சி, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் புதிய ஜனநாயக முன்னணி, முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் பொதுஜன முன்னணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

அதேபோல, தமிழர் கட்சிகளும் தனித்தனியே களம் கண்டன. வாக்குப்பதிவு முடிந்த கையோடு, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அனுர குமாராவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு இந்த முறை தனிப்பெரும்பான்மையைக் காட்டிலும் கூடுதல் இடங்கள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

அனைத்து கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, தேசிய மக்கள் சக்தி ஒட்டுமொத்தமாக 70 சதவீத வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறது. சஜித் பிரேமதாசா தலைமையிலான எதிர்கட்சி கூட்டணி 18 சதவீத வாக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

Advertisement
Tags :
FEATUREDMAINnational makkal sakthi leadsPresident Anura KumaraSri Lankan parliamentary election
Advertisement
Next Article