For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ஹரிணி அமரசூரிய!

03:38 PM Nov 18, 2024 IST | Murugesan M
இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ஹரிணி அமரசூரிய

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய மற்றும் 20 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. மொத்தம் 225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், அதிபர் அனுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.

Advertisement

இதையொட்டி, இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூர்ய பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசாநாயக முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமரை தொடர்ந்து 20 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இதில், 12 பேர் அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் நிதி மற்றும் பாதுகாப்புத் துறையை அதிபர் அனுரகுமார திசாநாயக தக்கவைத்துக் கொண்டார்.

Advertisement

இலங்கை அமைச்சரவையில் தமிழருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இலங்கை மீன்வளத் துறை அமைச்சராக தமிழரான ராமலிங்கம் சந்திரசேகரன் பதவியேற்றுக் கொண்டார். அவர் தமிழில் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து கொண்டார்.

Advertisement
Tags :
Advertisement