இலங்கை முல்லைத்தீவில் இந்திய அரசின் பங்களிப்புடன் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!
முல்லைத் தீவில் இந்திய அரசின் பங்களிப்புடன் உருவாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இலங்கை அமைச்சர்கள் ஆய்வு செய்துள்ளதாக கிரிக்கெட் சங்கத் தலைவர் உதயசீலன் தெரிவித்துள்ளார்.
Advertisement
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்தியா உதவ வேண்டும் எனப் பிரதமர் மோடியிடம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா கோரிக்கை விடுத்தார்.
தற்போது முல்லைத் தீவில் இந்திய அரசின் நிதி உதவியுடன் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக கிரிக்கெட் சங்கத் தலைவர் உதயசீலன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கும், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதற்காகவும் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் முல்லைத்தீவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக இலங்கை அமைச்சர்கள் ஆய்வு நடத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.