செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இலவச விவசாய மின் இணைப்புகளை குறைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிப்பதுதான் அறிவாலயத்தின் திராவிட மாடலா? - ஹெச்.ராஜா கேள்வி!

07:00 PM Nov 22, 2024 IST | Murugesan M

இலவச விவசாய மின் இணைப்புகளை குறைத்து வாழ்வாதாரத்தை பறிப்பதுதான் அறிவாலயத்தின் திராவிட மாடலா?  என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

தமிழகத்தில் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின் இணைப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை சுட்டிக்காட்டியுள்ள ஹெச்.ராஜா, திமுக ஆட்சியில் தினம்தோறும் விவசாயிகள் போதுமான தண்ணீர் வசதியின்றியும், கடன் தொல்லையாலும் அல்லல்பட்டு வருவதாக விமர்சித்துள்ளார்.

Advertisement

தற்போது, இலவச விவசாய மின்இணைப்புகளையும் குறைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதுதான் திராவிட மாடலா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தானும் டெல்டாக்காரன்தான் என முதலமைச்சர் மேடையில் முழங்கியது உண்மையாக இருந்தால், இலவச விவசாய மின்இணைப்புகள் வழங்குவதில் நடக்கும் குளறுபடிகளை வெளிப்படையாக மக்கள் முன்கொண்டு வரவேண்டும் எனவும் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Tags :
bjpDMKh rajafree current to farmersFEATUREDMAIN
Advertisement
Next Article