செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்!

12:06 PM Mar 22, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கடலூர் அருகே இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

கடலூர் மாவட்டம் மா.கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகள் பூமிக்கா, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பூமிக்கா கருவுற்றதாகத் தெரிகிறது.

இதையடுத்து, தம்மைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்டீபனிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி ஸ்டீபன் கால தாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதனால் மன உளைச்சலிலிருந்த பூமிக்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement
Tags :
MAINRelatives block road with body demanding justice for young woman's death!உறவினர்கள் சாலை மறியல்கடலூர்
Advertisement