செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - அதிமுக நிர்வாகி கைது!

03:40 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

சென்னை படப்பையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் வசித்து வருபவர் பொன்னம்பலம். இவர், குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் அணி இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.  தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் 2 இளம் பெண்கள் இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளனர்.

இதில், ஒரு பெண்ணுக்கு பொன்னம்பலம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு, கீழ்படப்பைக்கு இடம் பெயர்ந்துள்ளனர். விடாது கருப்பாக, இளம் பெண்ணை செல்போனில் அழைத்து, மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

Advertisement

இதனால், ஆவேசம் அடைந்த இளம் பெண், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், நண்பர்கள் உதவியோடு பொன்னம்பலத்தை நையப்புடைத்துள்ளனர். இந்த விவகாரத்தில், பொன்னம்பலம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பாேலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே அவர் அதிமுகவில் இருந்து நிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Tags :
ChennaiKundrathurMAINPadapaiPolice have arrested an AIADMK executive iPonnambalam arrestsexual harassment of a young woman
Advertisement