தேனி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை: கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
02:14 PM Jan 25, 2025 IST
|
Murugesan M
தேனி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
வாழையத்துப்பட்டியைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த மோகனப்பிரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், மனமுடைந்த அவரது மனைவி திருமணமான ஆறே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கில் கோடீஸ்வரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement