செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இளம் வயதிலேயே துறவறம் பூண்டவர் ரமண மகரிஷி! : அண்ணாமலை புகழாரம்

10:46 AM Dec 30, 2024 IST | Murugesan M

எதையும் எதிர்பாராமல் தன் கடமையைச் செய்வதே சிறப்பு என்று போதித்தவர் ரமண மகரிஷி எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தான் யார் என்பதை உணர்தல் என்பதே பிறவியின் நோக்கம் என்ற தத்துவத்தைப் போதித்த மகான், ரமண மகரிஷி அவர்களது அவதார தினம் இன்று.

Advertisement

இளம் வயதிலேயே உலக நாட்டங்களைத் துறந்து, துறவறம் பூண்டவர். தம் இறுதி வரை, திருவண்ணாமலையிலேயே வாழ்ந்து, பக்தர்களுக்கு அருள் வழங்கியவர். எதையும் எதிர்பாராமல் தன் கடமையைச் செய்வதே சிறப்பு என்று போதித்தவர்.

எளிமையும், மனத்தூய்மையும் நிறைந்த ரமண மகரிஷி, உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் போற்றப்படுபவர். மகான் ரமண மகரிஷி அவர்களது அவதார தினத்தில், உலக மக்கள் அனைவர் நலனுக்காகவும், அமைதிக்காகவும் பிரார்த்தனை செய்து வணங்குகிறோம்  எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
bjp k annamalaiFEATUREDMAINRamana Maharishi became a monk at a young age! : Annamalai PraiseRamana Maharishi birthdayரமண மகரிஷி
Advertisement
Next Article