இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ராக்கெட் ஏவுதளம் தகர்ப்பு!
இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹைபா நகரின் மீது 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக பாலஸ்தீனத்தின் முக்கிய நகரமான காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலின் ஹைபா நகரை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
பெரும்பானான ராக்கெட்டுகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ராக்கெட் ஏவுதளம் தகர்க்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.