இஸ்ரோவிற்கு அண்ணாமலை வாழ்த்து!
விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணையச் செய்த இஸ்ரோ குழுவிற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் ‘டாக்கிங்’ செயல்முறை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம், செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைத்த 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணையச் செய்த இஸ்ரோ குழுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
வெற்றி பெற்ற #SPADExMission இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தருணம், இது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு பிறகு விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைத்த தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற நான்காவது நாடாகும். இந்த சாதனையை அடைய கடினமாக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.