செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஈசிஆர் சாலையில் இளம்பெண்கள் சென்ற காரை துரத்திய விவகாரம் - தனியார் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 5 பேர் கைது!

07:07 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

ஈசிஆர் சாலையில் இளம்பெண்கள் சென்ற காரை துரத்திச் சென்று அச்சுறுத்திய விவகாரத்தில் காட்டாங்குளத்தூர் தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திமுக கொடி கட்டிய சொகுசு காரில் வந்த இளைஞர்கள் சிலர், இளம்பெண்கள் சென்ற காரை துரத்திச் சென்று அச்சுறுத்திய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலான நிலையில்,

இதுதொடர்பாக கானாத்தூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காரின் பதிவு எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த கார்கள் இருப்பது தெரியவந்தது.

Advertisement

அதனடிப்படையில் கார்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், காட்டாங்குளத்தூர் தனியார் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Tags :
FEATUREDMAINDMK FLAG CAR ISSUEcollege student arrestedKattankulathur college student arrestedKattankulathurKanathur police
Advertisement